வேலை வாங்கி தருவதாக ரூ.3.50 கோடி மோசடிஓராண்டுக்கு பின் ஈரோட்டில் சிக்கிய வாலிபர்
வேலை வாங்கி தருவதாக ரூ.3.50 கோடி மோசடிஓராண்டுக்கு பின் ஈரோட்டில் சிக்கிய வாலிபர்சேலம்:சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த புதுகாலனியை சேர்ந்தவர் குணசீலன். இவர், 2024 பிப்., 17ல், எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். அதில், 'என் மகன் மகாதேவுக்கு, டி.என்.பி.எஸ்.சி.,யில் ஜே.இ., வேலை வாங்கி தருவதாக கூறி, கொங்கணாபுரம், ராஜவீதியை சேர்ந்த நித்யானந்தம், 22 லட்சம் ரூபாய் வாங்கினார். வேலை வாங்கி தராததோடு, பணத்தையும் தராமல் ஏமாற்றி விட்டார்' என கூறியிருந்தார். இதுதொடர்பாக, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில், மேட்டூர் சுற்றுப்புற பகுதியில் வேலை வாங்கி தருவதாக, பலரிடமும் பணம் பெற்று, போலி பணிநியமன ஆணை வழங்கி, 3.50 கோடி ரூபாய் வரை, நித்யானந்தம்,34, மோசடி செய்திருப்பது தெரிந்தது. கூட்டுச்சதி, மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து போலீசார், அவரை தேடி வந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறையில் இருந்த நித்யானந்தத்தை, நேற்று, போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.