உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் தடுத்த போலீசாரிடம் வாக்குவாதம்

தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் தடுத்த போலீசாரிடம் வாக்குவாதம்

ஓமலுார்: தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்திய, இந்து முன்னணி அமைப்பினரை, போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரப-ரப்பு ஏற்பட்டது.சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா, காருவள்ளி உள்-ளிட்ட பகுதியில், சேலம் மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் மூன்று விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது. மூன்றாவது நாளான நேற்று விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்வதற்காக, காருவள்ளியில் உள்ள இந்து முன்னணி அலுவலகம் முன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் சிலைகள் கொண்டு வரப்பட்டது. கோட்ட செயலர் பழனிசாமி பூஜையை முடித்து, விநாயகர் சிலை ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.ஊர்வலத்தில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் அருகே வந்தபோது, தீவட்டிப்-பட்டி போலீசார் தடுத்து நிறுத்தி செல்லக்கூடாது என தெரிவித்-தனர். அதை மறுத்து சந்தை வரை ஊர்வலமாக செல்ல அனுமதி கேட்கவே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார், இரு விநாயகர் சிலைகளுடன் வந்த வாகனங்களை தனித்தனியாக விசர்ஜனம் செய்ய திப்பம்பட்டி மற்றும் கூணான்டியூர் பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்-டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை