ஓமலுார் : ''தி.மு.க., குடும்ப கட்சி. தற்போது குடும்ப ஆட்சியாக மாறிவிட்-டது,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., குற்றம்சாட்-டினார்.நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து, 200 பேர் அ.தி.மு.க.,வில் இணையும் விழா, சேலம் மாவட்டம் ஓமலுாரில் உள்ள, புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. பொது செயலர் இ.பி.எஸ்., முன்னிலையில், 200 பேரும் இணைந்தனர். தொடர்ந்து இ.பி.எஸ்., அளித்த பேட்டி:தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், அம்மா உணவகங்கள் சரியாக செயல்படவில்லை. சென்னையில், 407 உணவகங்கள் இருந்த நிலையில், 19 மூடப்பட்டன. மூன்றாண்டுகளாக முதல்வர் ஸ்டாலின், ஏன் ஆய்வு செய்யவில்லை. அந்த உணவகத்துக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளதால், வேறு வழியின்றி ஆய்வு செய்-வதாக நாடகமாடுகிறார். மூன்றாண்டாக போதிய நிதி, தரமான உணவு பொருட்களை வழங்கவில்லை. குற்றஞ்சாட்டும் சென்னை மேயர், இதுவரை எத்தனை உணவகத்தில் ஆய்வு செய்தார்? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. கொலை மாநிலமாக மாறிவிட்டது. அ.தி.மு.க.,வில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., நீக்கப்-பட்டு விட்டார். ஊடகங்கள், மீண்டும் மீண்டும் அவர் குறித்து கேள்வி எழுப்புகின்றன. நீக்கப்பட்டவரின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆளுங்கட்சியாக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருக்கும்-போதும் விவாத மேடைகளில் ஊடகங்கள் எங்களைத்தான் விமர்-சனம் செய்கின்றன. ஊடகங்கள் நடுநிலையாக செயல்பட வேண்டும். அ.தி.மு.க.,வை விமர்சித்து அவதுாறு செய்தியை வெளியிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலையில் சந்தேகம் கேட்டால் கூட ஆள்வோருக்கு கோபம் வருகிறது. தி.மு.க.,வில் எவ்வளவு அனுபவம் வாய்ந்த தலை-வர்கள் உள்ளனர். அவர்களை விட்டுவிட்டு, ஸ்டாலின் மகன் என்பதால் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதாக கூறுவதை வரவேற்க முடியாது. தி.மு.க., குடும்ப கட்சி. தற்-போது குடும்ப ஆட்சியாக மாறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.