உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அனுமதியற்ற பள்ளி கட்டடம் வரன்முறைப்படுத்த வாய்ப்பு

அனுமதியற்ற பள்ளி கட்டடம் வரன்முறைப்படுத்த வாய்ப்பு

சேலம்: சேலம் கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்-டுள்ள அறிக்கை:மாவட்டத்தில், 2011 ஜன.,1க்கு முன்பாக, திட்ட-மில்லா பகுதிகளில் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை, வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், இணை-யதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.அதன்படி கடந்த ஆக.,1 முதல், 2025 ஜன.,31 வரை ஆறு மாத காலம் காலம் நீட்டிப்பு செய்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே திட்டமில்லா, அனுமதியற்ற மலையி-டப்பகுதியில் அமைந்துள்ள கட்டடங்களுக்கு, அரசு தெரிவித்துள்ள அனைத்து வழிமுறை-களை பின்பற்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ், விண்ணப்பிக்க விரும்புப-வர்கள், www.tcp.org.inஎன்ற இணையதள முகவ-ரியில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த இறுதி வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ