சென்னையில் இளையோர் தடகளம் சேலம் வீரர்கள் 17 பதக்கம் பெற்று அசத்தல்
சேலம்: சென்னையில் நடந்த, இளையோர் தடகள போட்டியில் சேலம் வீரர், வீராங்கனைகள், 17 பதக்கங்கள் பெற்று அசத்தியுள்ளனர்.சென்னை நேரு ஸ்டேடியத்தில், 6வது தமிழ்நாடு இளையோர் தடகள விளையாட்டு போட்டி கடந்த, 22, 23ல் நடந்தது. சென்னை, சேலம், நாமக்கல், தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்-டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். வீரர்க-ளுக்கு, 18, 20, 23 வயது என, மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. சேலம் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்-பாட்டு ஆணையத்தை சேர்ந்த, 16 பேர் பதக்கங்களை வென்றனர்.போல்ட் வால்ட் மற்றும் டெக்கத்லான் போட்டியில் கவின்ராஜா, டெக்கத்லான் போட்டியில் கவுதம், போல்ட்வால்ட் போட்டியில் சவுந்தர்யா, அருள்மொழி, நீளம் தாண்டுதல் போட்டியில் ஷாஷா ஆகியோர் தங்கப்பதக்கம், பிற வீரர், வீராங்கனைகள், 7 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம், 17 பதக்கங்களை பெற்று அசத்-தினர். இவர்களை பயிற்சியாளர் இளம்பரிதி பாராட்டினார்.