| ADDED : ஜூலை 17, 2024 09:01 AM
சேலம் : சேலம் மாவட்டத்தில், நடப்பு நிதியாண்டு கல்வி கடன் வழங்குவது குறித்து, ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.அதில் கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது:அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்க, மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்வி கற்க பொருளா-தாரம் தடையாக இருக்கக்கூடாது என்பதற்கு கல்விக்கடன் வழங்கப்படுகிறது. சேலம் மாவட்-டத்தில், 160 அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள் உள்ளன. கடந்த ஆண்டு, 5,773 மாணவ, மாணவி-யருக்கு, 89.01 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டது. நடப்பாண்டில், 7,000 பேருக்கு, 99 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.உரிய காரணமின்றி கல்வி கடன் விண்ணப்-பங்களை நிராகரிக்கக்கூடாது என, வங்கி அலு-வலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் கல்வி கடன் மேளா நடத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இதில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார், அனைத்து வங்கி கிளை மேலா-ளர்கள், கல்லுாரி ஒருங்கிணைப்பாளர்கள் பங்-கேற்றனர்.