மேலும் செய்திகள்
2 வீட்டின் பூட்டை உடைத்து 14 சவரன் நகை கொள்ளை
30-Aug-2024
வாழப்பாடி: காரிப்பட்டி, மின்னாம்பள்ளி அருகே செல்லியம்பாளையத்தை சேர்ந்தவர் இளங்கோ, 46. மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் பணி-புரிகிறார். நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு குடும்பத்தின-ருடன் வெளியே சென்றார். மதியம், 12:00 மணிக்கு திரும்பி வந்த-போது, பீரோ உடைக்கப்பட்டிருந்தது.பரிசோதனை செய்தபோது, அதில் இருந்த, 4 பவுன் சங்கிலி, வெள்ளி கொலுசு, வெள்ளிக்கொடி, 5,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. மேலும் வீட்டின் பின்புற கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே வந்து சென்றதும் தெரிந்தது. இதுகுறித்து இளங்கோ புகார்படி, காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
30-Aug-2024