மேலும் செய்திகள்
இடைப்பாடியில் தேங்கிய மழைநீர் அகற்றம்
27-Aug-2024
இடைப்பாடி: இடைப்பாடி நகராட்சி கமிஷனர் முஸ்தபா அறிக்கை:தேங்கி கிடக்கும் தண்ணீரில் தான் டெங்கு கொசு முட்டையிட்டு இனத்தை பெருக்குகிறது. அதனால் ஒவ்வொருவரும் வீட்டை சுற்றி மழைநீர் தேங்காமல், பாத்திரங்களில் நீண்ட நாட்களுக்கு தண்ணீரை சேமிக்காமல் பார்த்துக்கொண்டாலே கொசு உற்பத்தி-யாவதை கட்டுப்படுத்த முடியும். வீடுகளில் உள்ள கொள்கலன்-களில் கொசு புகாதபடி தண்ணீரை மூடி வைக்க வேண்டும். சுற்றி-யுள்ள இடங்களில் தேவையற்ற பொருட்களான தேங்காய் ஓடு, உரல், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், உபயோகமற்ற டயர், செடி வளர்க்கும் தொட்டி, குளிர்சாதன பெட்டியின் தட்டுகள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.
27-Aug-2024