ரூ.௫௦,௦௦௦ பறித்தவர் சிக்கினார்
ரூ.௫௦,௦௦௦ பறித்தவர் சிக்கினார்மேட்டூர்:கொளத்துார், பாலமலை ஊராட்சி, கெம்மம்பட்டியை சேர்ந்த, கூலித்தொழிலாளி சதீஷ், 29. இவர் மனைவி கீதாவுக்கு, மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த, 13ல் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, மனைவி பிரசவ வார்டில் இருக்க, அதன் அருகே காத்திருப்போர் அறையில் சதீஷ் துாங்கிக்கொண்டிருந்தார். முன்னதாக மருத்துவ செலவுக்கு கடனாக வாங்கிய, 50,000 ரூபாய், 170 கிராம் வெள்ளி கொலுசு, மொபைல் போனை, ஒரு பர்சில் சுருட்டி தலையில் வைத்திருந்தார். நள்ளிரவு எழுந்து பார்த்தபோது பர்சை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த சதீஷ், மேட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார், 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தபோது, மாதையன்குட்டை, மேல்காலனி கூலித்தொழிலாளி சஞ்சய் திருடியது தெரிந்தது. அவரை நேற்று கைது செய்த போலீசார், பர்சை மீட்டனர்.