இடதுசாரி கூட்டியக்கம் ஆர்ப்பாட்டம்
சேலம், கவின் ஆணவ படுகொலையை கண்டித்து, இடதுசாரி கூட்டியக்கம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. உழைப்போர் இயக்க பிரமுகர் கண்ணன் தலைமை வகித்தார். அதில், ஆணவ படுகொலையை செய்த சுர்ஜித் உள்பட அவரது பெற்றோர், போலீசார், கூலிப்படையினரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்து, அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்; கவின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கி, 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குதல்; சிறப்பு சட்டம் இயற்றி ஆணவ படுகொலையை விசாரிக்க தனி நீதிமன்றம் உருவாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.