சேலம் காந்தி விளையாட்டரங்கில்ஏப்.,1 முதல் நீச்சல் பயிற்சி துவக்கம்
சேலம் காந்தி விளையாட்டரங்கில்ஏப்.,1 முதல் நீச்சல் பயிற்சி துவக்கம்சேலம்:சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கை:சேலம் மகாத்மாகாந்தி விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் ஏப்.,1ல், நீச்சல் கற்றல் பயிற்சி முகாம் தொடங்க உள்ளது. தொடர்ந்து, 12 நாட்கள் வீதம் பயிற்சி அளிக்கப்படும். காலை, 7:00 - 8:00 மணி வரை, 8:00 - 9:00 வரை, 9:00 - 10:00 வரை. மாலையில், 3:00 - 4:00 வரை, 4:00 - 5:00 வரை, 5:00 - 6:00 மணி வரை என, ஒருமணி நேரம் வீதம் பயிற்சி உண்டு. முதல்கட்ட பயிற்சி ஏப்.,1 முதல், 13 வரை, 2ம் கட்ட பயிற்சி, 15 -27 வரை, 3ம் கட்ட பயிற்சி, ஏப்.,29 - மே.11 வரை, 4ம் கட்ட பயிற்சி, மே 13 -25 வரை, 5ம் கட்ட பயிற்சி, 27 - ஜூன். 8 வரை நடக்கிறது.திங்கட்கிழமை நீச்சல்குளம் செயல்படாது. 12 நாட்களுக்கான பயிற்சி கட்டணம், 1,500 ரூபாய். ஜிஎஸ்டி., 18 சதவீதம் சேர்த்து, 1,770 ரூபாய். பெண்களுக்கு காலை, 9:00 - 10:00 வரை, மாலை, 5:00 - 6:00 மணி வரை பயிற்சி. முன்னதாக சிறுவர், சிறுமி என இருபாலரும் பயிற்சி பெறலாம். கோடைக்கால நீச்சல் பயிற்சி கட்டணத்தை www.sdat.tn.gov.inஎன்ற இணையதளத்தில் செலுத்தலாம். தவிர, ஏ.டி.எம்., கார்டு, ஜி -பே, போன் - பே மூலமாகவும் செலுத்தலாம். ஆனால், ரொக்கமாக பெற இயலாது. இவ்வாறு கூறியுள்ளார்.