உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டாஸ்மாக் தொழிலாளர்26 பேர் மீது வழக்கு

டாஸ்மாக் தொழிலாளர்26 பேர் மீது வழக்கு

டாஸ்மாக் தொழிலாளர்26 பேர் மீது வழக்குசேலம்:பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல் உள்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில செயலர் சுகமதி தலைமையில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால், 26 பேரை கைது செய்த போலீசார், மாலையில் விடுவித்தனர். ஆனால் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, சேலம் டவுன் வி.ஏ.ஓ., சுதாகர் புகார்படி, டவுன் போலீசார், சுகமதி, 57, மாநில துணை செயலர் முருகேசன், 66, உள்ளிட்ட அரசு பணியாளர், 26 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ