உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அபி ஈமு பார்ம்ஸ் சொத்து வரும் 23ல் பொது ஏலம்

அபி ஈமு பார்ம்ஸ் சொத்து வரும் 23ல் பொது ஏலம்

சேலம், : வரும், 23ல் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அபி ஈமு பார்ம்ஸ் நிறுவன சொத்துகள் ஏலம் விடப்பட உள்ளது.இதுகுறித்து சேலம் டி.ஆர்.ஓ., மேனகா அறிக்கை:முதலீட்டாளர் மோசடி வழக்கில் முடக்கம் செய்யப்பட்டு நீதிமன்ற வழக்கில், விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்ட அபி ஈமு பார்ம்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அசையும் சொத்துகள், ஜூலை, 23 காலை, 11:30 மணிக்கு, கலெக்டர் அலுவலக அறை எண்: 115ல் பொது ஏலம் விடப்பட உள்ளது.ஏல நிபந்தனைகள், கலெக்டர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், தாசில்தார் அலுவலக விளம்பர பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளன. அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஏலத்தில் பங்கேற்கலாம். இந்நிறுவன வாகனங்கள், ஸ்வர்ணபுரியில் உள்ள பொருளா-தார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றை ஏல தேதிக்கு முன் பார்வையிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ