ஓமலுார்: ''முன்னாள் மாணவர்கள், தற்போது படிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்,'' என, பொறியியல் கல்லுாரி முதல்வர் விஜயன் பேசினார்.சேலம், கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரியில், 1995 - 99 வரை படித்தவர்கள், 25ம் ஆண்டை முன்னிட்டு, 'நண்-பேன்டா' தலைப்பில், சந்திப்பு விழாவை, கடந்த, 26 முதல் நேற்று வரை கொண்டாடினர். இதில் அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள், இந்தியா முழுதும் பல்வேறு மாநிலங்கள், அரசு, தனியார் துறைகளில் பணிபுரிவோர், தொழில் அதிபர்கள் என, 150க்கும் மேற்பட்டோர், குடும்பத்தினருடன் பங்கேற்றனர். கல்லுாரி வளாகத்தில், முன்னாள் மாணவர்கள், குடும்பத்தின-ருடன் பல்வேறு நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கு விளையாட்டு, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தினர். விழா நிறைவாக நேற்று, முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட ஆசிரியர்க-ளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் அலங்கார விளக்குகளுடன் சீரமைக்கப்பட்ட கலையரங்க மேடையை, கல்லுாரி முதல்வர் விஜயன் திறந்து வைத்தார்.தொடர்ந்து அவர் பேசுகையில், ''நான் முதல்வன் திட்டத்தில் மாணவ, மாணவியருக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்-றன. அதிநவீன, 'லேப்' உருவாக்கப்பட்டுள்ளது. முன்னாள் மாண-வர்கள் ஒவ்வொருவரும் தற்போது படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க கூடியவர்களாகவும், வழிகாட்டியா-கவும் இருக்க வேண்டும். இதன்மூலம் சமூக வளர்ச்சியுடன் மாணவர்கள் வளர்ச்சியும் மேம்படும்,'' என்றார்.