உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பாதியில் நிற்கும் அங்கன்வாடி மையம் அதிகாரிகள் கண்ணில் படவில்லையா?

பாதியில் நிற்கும் அங்கன்வாடி மையம் அதிகாரிகள் கண்ணில் படவில்லையா?

பனமரத்துப்பட்டி: அங்கன்வாடி மைய கட்டுமான பணி, ஐந்து ஆண்டுகளாக பாதியில் நிற்பதால், பெற்-றோர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பனமரத்துப்பட்டி, சந்தைபேட்டையில் அரசு தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. அங்கு இருந்த பழைய அங்கன்வாடி மைய கட்டடம் சேதம-டைந்ததால், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது.கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்-டத்தில், புதியதாக அங்கன்வாடி மையம் கட்டும் பணி தொடங்கியது. இரண்டு மாதம் நடந்த கட்-டுமான பணி, பாதியில் நிறுத்தப்பட்டது.தற்போது, குழந்தைகள் மையம், அரசு தொடக்-கப்பள்ளியின் ஒரு அறையில் செயல்படுகிறது. அங்கு போதிய வசதி இல்லாமல், குழந்தைகள் சிரமப்படுகின்றனர்.ஐந்து ஆண்டுகளாக பாதியில் நிற்கும் கட்ட-டத்தில், புல், பூண்டு வளர்ந்து புதர்மண்டி கிடக்-கிறது. இது அரசு அதிகாரிகளுக்கு தெரியாதா, தெரிந்தும் கண்டும் காணாமல் உள்ளனரா என, பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.மாவட்ட நிர்வாகம், பாதியில் விடப்பட்ட அங்-கன்வாடி மையத்தை கட்டி முடிக்க நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ