உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஊரக வேலை திட்ட முறைகேடு புகார் தி.மு.க., - ஊராட்சி தலைவி நீக்கம்

ஊரக வேலை திட்ட முறைகேடு புகார் தி.மு.க., - ஊராட்சி தலைவி நீக்கம்

ஆத்துார்: தேசிய ஊரக வேலை திட்டத்தில் முறைகேடு புகார் தொடர்பாக, தி.மு.க.,வை சேர்ந்த ஊராட்சி தலைவியை நீக்கி, சேலம் கலெக்டர் உத்தரவிட்டார்.சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே பைத்துார் ஊராட்சி தலைவி கலைச்செல்வி, 50. தி.மு.க.,வை சேர்ந்த இவர், பல்வேறு முறை-கேடு செய்வதாக, சேலம் கலெக்டர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், லஞ்ச ஒழிப்புத்துறையிடம், வார்டு உறுப்பினர்கள் புகார் செய்தனர். 2023 செப்., 29ல், அப்போதைய ஆத்துார் தாசில்தார் மாணிக்கம் தலைமையில் ஊராட்சி சிறப்பு கூட்டம் நடந்தது.தொடர்ந்து அப்போதைய கலெக்டர் கார்மேகம், 'முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த கலைச்செல்வி, ஊராட்சி தலைவி பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்' என, உத்த-ரவிட்டார்.இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கலைச்செல்வி வழக்கு தொடர்ந்தார். ஊரக வளர்ச்சித்துறை செயலர் விசாரித்து அதன் விபரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தார்.இதையடுத்து விசாரித்த நீதிமன்றம், கலெக்டரின் உத்தரவை அமல்படுத்த உத்தரவிட்டது.கடந்த, 15ல், இதற்கான அரசாணை வெளியிட்ட நிலையில் பைத்துார் ஊராட்சி தலைவியை பதவி நீக்கம் செய்யும்படி, ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப்சிங்பேடி, சேலம் கலெக்டர் பிருந்தாதேவிக்கு உத்தரவிட்டார்.அதன்படி அவரும், கலைச்செல்வியை பதவி நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி