உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோவில்களை சீரழிக்கும் தி.மு.க., இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

கோவில்களை சீரழிக்கும் தி.மு.க., இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

சேலம்: இந்து முன்னணி சார்பில் சேலம், கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் கோட்ட தலைவர் சந்-தோஷ்குமார் தலைமை வகித்தார். அதில் தமிழகத்தில் இந்து கோவில்களை சீரழித்து வரும், தி.மு.க., அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது போலீசார், ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி மறுத்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, மாநில செயலர் தாமு வெங்கடேஸ்வரன், மாநகர் மாவட்ட தலைவர் கண்ணன் உள்-பட, 73 பேரையும் போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து சந்தோஷ்குமார் கூறுகையில், ''இந்து கோவில்கள், அறநிலைத்துறையிடம் இருக்கக்கூடாது. கோவில் நிர்வாகம், இந்-துக்கள் கையில் இருக்கவேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ