உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 500 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கல்

500 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கல்

சங்ககிரி : சங்ககிரி லாரி உரிமையாளர் சங்கம், பசுமை சங்ககிரி அமைப்பு இணைந்து சங்ககிரி தாலுகா பகுதிகளில், 35,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். சங்ககிரி டவுன் பஞ்சாயத்து, ஒன்றிய பகுதிகளை பசுமையாக்க நினைத்த அவர்கள், பல்வேறு வகை விதைகளை சேகரித்து ஞாயிறு-தோறும் பதியம் வைத்து வளர்க்கின்றனர்.இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா வட்டூர் ஊராட்சியில், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் உதவியோடு, மரங்களை நட்டு வளர்க்க, ஊராட்சி நிர்வாகம் சார்பில் பசுமை சங்ககிரி அமைப்பினரை அணுகினர். இதனால் அதன் நிறுவனர் மரம் பழனிசாமி, பதியம் போட்டு வைத்திருந்த இலுப்பை, நாவல், புங்கன், பூவரசு, பாதாம், கொடுக்காபுளி, வேம்பு, புளி உள்பட, 500 மரக்கன்றுகளை நேற்று இலவசமாக வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ