உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாணவர்களுக்கு மஞ்சப்பை

மாணவர்களுக்கு மஞ்சப்பை

ஓமலுார் : ஓமலுார் அருகே முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்-ளியில், சர்வதேச பிளாஸ்டிக் பை தடுப்பு தின விழா நேற்று நடந்-தது. தலைமை ஆசிரியை கோசலை தலைமை வகித்தார். அதில் மாணவ, மாணவியருக்கு, 'தவிர்ப்போம் பிளாஸ்டிக் பை' தலைப்பில் பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன.தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் கோசலை பேசுகையில், ''பிளாஸ்டிக் பை பயன்பாட்டால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. பழைய மரபுப்படி துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும்,'' என கேட்டுக்கொண்டார். பின் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, ஓமலுார் வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுனர் மங்கையர்கரசி, மஞ்சள் துணிப்பை வழங்கினார். பள்-ளியின் தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை