உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நடுரோட்டில் பெண்ணை கட்டிப்பிடித்தவர் கைது

நடுரோட்டில் பெண்ணை கட்டிப்பிடித்தவர் கைது

சேலம் : சேலம், அம்மாபேட்டை, கிருஷ்ணன்புதுாரை சேர்ந்த, 39 வயது பெண், அதே பகுதியில் பவர்லுாம் பட்டறைக்கு வேலைக்கு செல்கிறார். கடந்த, 15 மதியம், அவர் வேலைக்கு, தனியார் பள்ளி அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது மர்ம நபர், அந்த பெண்ணை கட்டிப்பிடித்து தகாத முறையில் நடக்க முயன்றார். பெண் கூச்சலிட, மக்கள் அவரை மீட்டனர். அதற்குள் மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து, 'சிசிடிவி' காட்சி பரவிய நிலையில் அப்பெண் நேற்று முன்தினம் வீராணம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்ததில், மன்னார்பா-ளையம் பிரிவு பகுதியை சேர்ந்த கண்ணன், 28, என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி