உள்ளூர் செய்திகள்

மூதாட்டி கொலை?

ஓமலுார் : ஓமலுார் அருகே பல்பாக்கியை சேர்ந்த, விவசாயி காளியம்மாள், 60. இவரது கணவர் ராஜப்பன் இறந்துவிட்டார். ஒரு மகன், மகள் உள்ளனர். மகனுடன் காளியம்மாள் வசித்தார். நேற்று வீட்டில் இருந்த காளியம்மாளை காணவில்லை என, மகன் தேடினார்.இந்நிலையில் நேற்று மாலை, வீடு அருகே ஈஸ்வரன் கோவில் செல்லும் வழியில் உள்ள காட்டுப்பகுதியில் ரத்த காயங்களுடன் காளியம்மாள் இறந்து கிடந்தார். ஓமலுார் போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.போலீசார் கூறுகையில், 'காளியம்மாள் சொத்து பிரச்னையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி