உள்ளூர் செய்திகள்

முதியவர் சடலம்

சேலம், சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தின் வடக்கு பகுதியில், 75 வயது மதிக்கத்தக்க முதியவர் உடலில் காயங்களுடன் நேற்று காலை சடலமாக கிடந்தார். சம்பவ இடத்திற்கு வந்து சேலம் ரயில்வே போலீசார், உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.முதற்கட்ட விசாரணையில், ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனவும், இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விபரம் கிடைக்கவில்லை. முதியவரின் கையில் கொளுஞ்சியப்பன், சடையன் என்று பச்சை குத்தப்பட்டு உள்ளது. அதை வைத்து அவரை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ