மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம்
சேலம், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கம் சார்பில், சேலம் நாட்டாண்மை கழக கட்டட வளாகத்தில் உள்ள சுகாதாரப்பணி துணை இயக்குனர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தனராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் கேசவமூர்த்தி பேசுகையில், ''காலியாக உள்ள, 700க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். வீரிய தன்மையுள்ள மருந்துகளை பாதுகாக்க, அனைத்து மருத்துவமனைகளிலும் குளிர்பதன வசதியுடன் கூடிய மருந்து கிடங்குகளை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை நிறைவேற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்' என்றார்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் சுரேஷ், தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்க மாநில செயலர் ரமேஷ், மருந்தாளுனர்கள் சங்க மாநில செயலர் கிரிராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.