உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பஸ்கள் மோதல் 10 பயணிகள் காயம்

பஸ்கள் மோதல் 10 பயணிகள் காயம்

வாழப்பாடி: சேலத்திலிருந்து திருமனுார் நோக்கி அரசு டவுன் பஸ், நேற்று காலை, 8:00 மணிக்கு சென்றது. வெள்ளாளகுண்டம் பிரிவு ரோடு அருகே, சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பஸ், அரசு டவுன் பஸ் பின்புறம் மோதியது. இதில் இரு பஸ்களிலும் பயணம் செய்த, 10க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயமடைந்தனர். வாழப்பாடி போலீசார், சம்பவ இடத்-திற்கு சென்று, சேதமடைந்த பஸ்களை அப்புறப்படுத்தி, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ