உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தலைவன் உள்பட 2 பேர் கைது 34 பவுன், ரூ.24,500 மீட்பு

தலைவன் உள்பட 2 பேர் கைது 34 பவுன், ரூ.24,500 மீட்பு

சேலம்: சேலம், அம்மாபேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரோஜா, 59. இவரது கணவர் பாபுலால். வெள்ளி வியாபாரி. இவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 63 பவுன் நகைகள், 65 லட்சம் ரூபாய், 15 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில், பழ வியாபாரி வள்ளி உள்பட, 5 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில் கொள்ளை கும்பல் தலைவனான, திப்பு நகரை சேர்ந்த அப்சர், 32, ஜோதி தியேட்டரை சேர்ந்த சுரேஷ், 36, ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 34 பவுன், 24,500 ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

போலி டீத்துாள் விற்பனை 2 கடைக்காரர் மீது வழக்கு

சேலம்: சேலம், சூரமங்கலம் உழவர் சந்தை பகுதியில் உள்ள கடைகளில் போலி டீத்துாள், சோப்புத்துாள் உள்ளிட்டவற்றை விற்பதாக, சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதன் மண்டல இயக்குனர் சதீஷ்குமார் உள்ளிட்ட அலுவலர்கள், நேற்று முன்தினம் கடைகளில் சோதனை நடத்தினர். அதில் இரு மளிகை கடைகளில் பிரபல நிறுவனங்கள் பெயரில் டீத்துாள் பாக்கெட், துணி துவைக்கும் பவுடர் பாக்கெட் என, 47,000 ரூபாய் மதிப்பில் போலி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.தொடர்ந்து சதீஷ்குமார் புகார்படி, ஜி.கே.ஜெனரல் ஸ்டோர், சூர்யா ஸ்டோர் ஆகிய கடைகளின் உரிமையாளர்கள் மீது சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ