சேலம் : சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொண்டையம்பட்டி ஏரியில் மண் எடுக்கும் பணியை, கலெக்டர் பிருந்தாதேவி நேற்று பார்-வையிட்டார்.தொடர்ந்து அவர் கூறியதாவது:சேலம் மாவட்டத்தில், 200 நீர்நிலைகள், வண்டல் மண், களிமண் போன்றவற்றை வெட்டி எடுத்து விவசாய பயன்பாடு, மண்-பாண்ட தொழிலுக்கு பயன்படுத்திக்கொள்ள தகுதி வாய்ந்தவையாக கண்டறியப்பட்டு அரசி-தழில் வெளியிடப்பட்டுள்ளது. விவசாய பயன்-பாட்டுக்கு, ஏக்கருக்கு நன்செய் நிலம் எனில், 25 டிராக்டர் லோடு, புன்செய்நிலம் எனில், 30 டிராக்டர் லோடுகள் என்றும், மண்பாண்ட தொழிலுக்கு, ஒருவருக்கு, 20 டிராக்டர் லோடுகள், 30 நாட்களுக்குள், இலவசமாக வெட்டி எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. விருப்பம் உள்ள விவசாயிகள், மண்-பாண்ட தொழிலாளர்கள், அருகே உள்ள இ - சேவை மையங்களில் ஆவணங்களுடன் ஆன்-லைனில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.சேலம் மாவட்டத்தில் இலவசமாக வெட்டி எடுக்க, 37,961 கன மீட்டர் அனுமதிக்கப்பட்டுள்-ளது. இதுவரை, 1,448 விண்ணப்பங்கள் பெறப்-பட்டு, 650 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்-ளது. மீதி விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பை, விவசாயிகள், மண்பாண்ட தொழிலா-ளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.அப்போது புவியியல், சுரங்கத்துறை துணை இயக்குனர் பன்னீர்செல்வம் உடனிருந்தார்.