உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பொறியியல் உதவி மையத்தில் 202 மாணவர்கள் விண்ணப்பம்

பொறியியல் உதவி மையத்தில் 202 மாணவர்கள் விண்ணப்பம்

ஓமலுார்;சேலம் அரசு பொறியியல் கல்லுாரியில் பொறியியல் பிரிவு மாணவர் சேர்க்கை உதவி மையம் கடந்த மே, 6 முதல் செயல்பட்டது. அங்கு இணையதளம் மூலம் விண்ணப்ப பதிவு, விண்ணப்பங்களை நிரப்புதல், அசல் சான்றிதழ்களை பதிவேற்றுதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன. இதற்கு, 30 கணினிகள் வைக்கப்பட்டு ஆசிரியர் நியமிக்கப்பட்டிருந்தனர். விடுமுறை நாட்களிலும் பணி நடந்தது. நேற்று ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள். இதுவரை அங்கு, 202 மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !