உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 3 பேருக்கு தாசில்தாராக பதவி உயர்வு

3 பேருக்கு தாசில்தாராக பதவி உயர்வு

3 பேருக்கு தாசில்தாராக பதவி உயர்வுசேலம்:சேலம் கலெக்டர் அலுவலக, 'பி' பிரிவு தலைமை உதவியாளர் நாகூர்மீராசா, பதவி உயர்வு பெற்று காடையாம்பட்டி தாசில்தாராக, நேற்று முன்தினம் பதவி ஏற்றார்.அதேபோல் ஏற்காடு தலைமையிடத்து துணை தாசில்தார் செந்தில்குமார், சேலம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், சேலம் தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கீதாராணி, சந்தியூர் டாஸ்மாக் கலால் மேற்பார்வை அலுவலராகவும் பதவியேற்றனர்.சேலம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் முத்துராஜா, சேலம் அரசு கேபிள் 'டிவி'க்கும், காடையாம்பட்டி தாசில்தார் மனோகரன், சேலம் மேற்கு தாலுகாவுக்கும் இடமாற்றப்பட்டனர். தவிர கலால் மேற்பார்வையாளர் தமிழ்முல்லை, அரசு கேபிள் தாசில்தார் பிரகாஷ், மேற்கு தாசில்தார் மாதேஸ்வரன், துணை கலெக்டராக பதவி பெற்று இடமாறு தலாகி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை