பாலியல் வழக்கு 3 மாணவர் கைது
ஆத்துார்:சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும், 14 வயது மாணவியை, அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும், 16 வயது மாணவர்கள் மூவர், கூட்டாக பாலியல் தொந்தரவு செய்தனர்.மகளிர் போலீசார், மூன்று மாணவர்களையும், போக்சோவில் கைது செய்தனர். சம்பவத்தை மறைத்ததாக, தலைமையாசிரியர் முத்துராமன், ஆசிரியர்கள் ராஜேந்திரன், பானுப்ரியா கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.தலைமையாசிரியர் கள்ளக்குறிச்சி நைனார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், ஆசிரியை கள்ளக்குறிச்சி மாவட்டம், சித்தலுார் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து, பள்ளி கல்வித்துறை, நேற்று முன்தினம் உத்தரவிட்டது.