உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 30 ஆண்டுக்கு பின்நிரம்பிய ஏரி

30 ஆண்டுக்கு பின்நிரம்பிய ஏரி

30 ஆண்டுக்கு பின்நிரம்பிய ஏரிஜலகண்டாபுரம், :ஜலகண்டாபுரம் அருகே நரியம்பட்டியில், 15 ஏக்கரில், வாத்திப்பட்டி ஏரி உள்ளது. இதன்மூலம், 500 ஏக்கர் பாசன வசதி பெறும். இந்த ஏரிக்கு, மேட்டூர் உபரி நீரேற்றும் திட்டம் - 2ல், குழாய் மூலம் கடந்த, 7ல் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தற்போது ஏரி, 30 ஆண்டுகளுக்கு பின் நிரம்பி கோடி விழுந்தது. பொங்கல் விடுமுறையால், அப்பகுதி கிராம மக்கள், நேற்று வாத்திப்பட்டி ஏரியில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் அப்பகுதியில் உழவு பணியை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ