உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏரியில் மண் எடுத்த 30 லாரிகள் சிறைபிடிப்பு

ஏரியில் மண் எடுத்த 30 லாரிகள் சிறைபிடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இடைப்பாடி:சேலம் மாவட்டம், ஓமலுாரில் இருந்து பரமத்தி வேலுார் வரை, நான்கு வழிச்சாலை போடப்படுகிறது. இச்சாலை பணியில், ஈரோடைச் சேர்ந்த, 'பி அண்டு சி ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தினர் ஈடுபடுகின்றனர். சாலை பள்ளங்களை சமன்படுத்த, சேலம் மாவட்டம் இடைப்பாடி தாலுகா கச்சுப்பள்ளியில் உள்ள அம்மாபாளையம் ஏரியில், 5,000 கி.மீ., அளவில் மண் எடுத்துக் கொள்ள, கலெக்டர் பிருந்தாதேவி, ஜூன், 11-ல் அனுமதி அளித்திருந்தார்.நேற்று ஏரியில், மண் எடுத்துக் கொண்டிருந்தபோது, மூன்று ஹிட்டாச்சி வாகனங்கள், 30க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை, அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனர். அவர்களிடம், இடைப்பாடி தாசில்தார் வைத்திலிங்கம் மற்றும் கொங்கணாபுரம் போலீசார் பேச்சு நடத்தினர்.அப்போது, அதிகளவில் மண் எடுத்ததாகவும், சாலை பணிக்கு மட்டுமின்றி குமாரபாளையத்தில் விற்பனை செய்வதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டினர். அதற்கு, 'புகார் அளித்தால், அளவீடு செய்து விதிமீறி இருந்தால் அபராதம் விதிக்கப்படும்' என தாசில்தார் கூறினார். பின், டிப்பர் லாரிகளில் இருந்த மண்ணை, ஏரியிலேயே கொட்டிவிட்டு அனைத்து வாகனங்களையும் வருவாய் துறையினர் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

செல்வக்கடுங்கோவாழியாதன்,அரண்மனைபுதூர்
ஜூலை 04, 2024 06:10

சக்குடி To பூவந்தி மார்க்கம் சிவகங்கை வழியாக ஒரூ நாளைக்கு சுமார் 500 பத்து சக்கரம் பண்ணிரெண்டு சக்கர லாரிகளில் கிராவல் மண் ஒரே பெர்மிட்டில் அழியக் கூடிய மையில் நேரத்தை மட்டும் மாற்றி அப்போதைக்கு அப்போது பக்கா அரசாங்க சீல் வைத்த பெர்மிட்டுடன் பல லோடு கிராவல் மண் கடத்தப் பட்டு கொண்டிருங்கிறது இதை கேள்வி கேட்க யாருமே இல்லை இத்தனைக்கும் பூவந்தியில் ஒரு போலீஸ் செக் போஸ்ட்டும் சிவகங்கை யில் ஒரு போலீஸ் செக்போஸ்டும் உள்ளன இவர்கள் அந்த கடத்தல் லாரிகளை கண்டு கொள்ளவே மாட்டார்கள் இரவில் அந்த லாரிகள் வசதியாக இடையூறு இன்றி போவதற்கு தடுப்பு பேரிகார்டை அதிக இடைவெளி விட்டு நகர்த்தி வைத்து விடுவார்கள். ஆனால் அப்புராணி விவசாயிகள் தங்கள் டூ வீலரில் பின் புறம் தங்கள் தோட்டத்தில் விளைய வைத்த காய்கறி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு போனால் அவர்களை பிடித்து கேஸ் போடுவார்கள் சில போலீஸ் காரர்கள் அவர்கள் மூட்டையில் உள்ள கத்தரிக்காயையோ அல்லது முறுங்கைக் காயையோ பிடிங்கிக் கொண்டு கேஸ் போடாமல் தாயுள்ளத்தோடு அனுப்பி விடுவார்கள்.


sethu
ஜூலை 04, 2024 09:09

தமிழனின் ஒற்றுமை சிதறடிக்கப்பட்டுள்ளது இனிமேல் அழிவூ நிச்சயம் .


V Ramasami
ஜூலை 04, 2024 05:49

,இவர்களுக்கு ஆன்மாக்களின் மீது இரக்கம் எப்போது உருவாகும்? பிறப்பு முதல் இவர்கள் வேலையே பிறரை விட மோசமாகவே உள்ளதே. இதுதா தலை விதியோ?


...
ஜூலை 04, 2024 05:32

சாலைப் பணி சும்மாவா செய்கிறார்கள் டெண்டர் எடுத்து பணம் வாங்கிக்கொண்டு தானே செய்கிறார்கள் ஏரியில் இருந்து மண் ஏன் தரவேண்டும்


Kasimani Baskaran
ஜூலை 04, 2024 05:22

பொது மக்கள் வாகனங்களை சிறைபிடித்து நேரடியாக நிரூபித்து புகார் அளித்தால் திரும்பவும் புகார் அளித்து நிரூபிக்க வேண்டும். இப்படிப்பட்ட நேர்மையான அதிகாரிகளை வைத்து தமிழகத்தையே கூட பிளாட் போட்டு விற்கலாம்.


சமீபத்திய செய்தி