ரயில் பயணியர்32 பேருக்கு அபராதம்
ரயில் பயணியர்32 பேருக்கு அபராதம்சேலம்:சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று முன்தினம், கடலுார் - சேலம் ரயிலில், பயணியர் வந்து இறங்கினர். அப்போது தலைமை டிக்கெட் பரிசோதகர் சிவக்குமார் தலைமையில் குழுவினர், டிக்கெட் சரிபார்ப்பு செய்தனர். அதில், 32 பேர் டிக்கெட் இல்லாமல் பயணித்தது தெரிந்தது. அவர்களுக்கு, 9,510 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.