உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாலையோரம் நின்ற லாரி மீது பைக் மோதி தந்தை, மகன் பலி

சாலையோரம் நின்ற லாரி மீது பைக் மோதி தந்தை, மகன் பலி

மேட்டூர், சேலம் மாவட்டம் மேட்டூர், கோம்புரான்காட்டை சேர்ந்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர் ராஜகோபால், 39; இவரின் மனைவி கவுரி, 35; இவர்களின் மகன்கள் மகிழவன், 11, வான்முகிலன், 8; இருவரும் மேட்டூரில் தனியார் பள்ளியில் முறையே, 6, 3ம் வகுப்பு மாணவர்கள். ஈரோடு மாவட்டம் சிவகிரி மின்வாரியத்தில் போர்மேனாக பணிபுரிந்த, கவுரியின் தந்தை கோவிந்தன், இன்று ஓய்வு பெறுகிறார். இதற்காக பிரிவுபசார விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்க 'யுனிகான்' பைக்கில், மனைவி, மகன்களுடன் ராஜகோபால் புறப்பட்டார். ராஜகோபால் ஹெல்மெட் அணிந்திருந்தார். பைக் பின்னால் மகிழவன், கவுரி, முன்புறம் வான்முகிலன் அமர்ந்து பயணித்தனர்.சேலம் - ஈரோடு மாவட்ட எல்லை அருகே, பெரும்பள்ளம் பகுதியில், 12:00 மணியளவில் பைக் சென்றபோது, அந்த இடத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது, எதிர்பாராதவிதமாக பைக் மோதியது. இதில் வான்முகிலன் சம்பவ இடத்தில் பலியானான்.படுகாயமடைந்த மற்ற மூவரும் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வழியில் ராஜகோபால் இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ