உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இடைப்பாடியில் நிரம்பிய பெரிய ஏரி

இடைப்பாடியில் நிரம்பிய பெரிய ஏரி

இடைப்பாடி: இடைப்பாடியில் உள்ள பெரிய ஏரி நிரம்பியதால், 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.இடைப்பாடியில், 535.99 ஏக்கர் பரப்பளவுள்ள பெரிய ஏரி உள்-ளது. மழை காலங்களில் ஏற்காட்டில் உற்பத்தியாகும் சரபங்கா ஆற்று தண்ணீர், ஓமலுார், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, இடைப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் நுாற்றுக்கும் மேற்-பட்ட கிராமங்கள் வழியாக, இந்த ஏரிக்கு நீர் வருகிறது. ஏரியில் நீர் நிரம்பினால், 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவ-சதி பெறும்.கடந்த ஒரு மாதமாக இடைப்பாடி சுற்று பகுதிகளில் பெய்த பலத்த மழையால், பெரிய ஏரி நேற்று நிரம்பியது. கடந்தாண்டு செப்., 23ல் நிரம்பியது. அதன் பிறகு, மழை இல்லாததால் ஏரியில் தண்ணீர் குறைந்து இருந்தது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக பெய்த மழையால், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நேற்று ஏரி நிரம்பியது. இதனால் சுற்றியுள்ள, 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்-ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ