உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இன்டர்நெட் இல்லாத சேவை மையம்: துண்டிக்கப்பட்டு கிடக்கும் கேபிள் ஒயர்

இன்டர்நெட் இல்லாத சேவை மையம்: துண்டிக்கப்பட்டு கிடக்கும் கேபிள் ஒயர்

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், 20 ஊராட்சிகளில் சேவை மையங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த வட்டார சேவை மையம் உள்ளது. ஊராட்சி சேவை மையத்தை செயல்படுத்தும் பொறுப்பு, மகளிர் குழுவிடம் வழங்கப்பட்டுள்ளது. சேவை மையத்துக்கு மின் பாதை வழியே இன்டர்நெட் கேபிள் ஒயர் கொண்டு செல்லப்படுகிறது.ஆனால் பனமரத்துப்பட்டி - கம்மாளப்பட்டி சாலையோரம் ஆத்துமேட்டில் திப்பம்பட்டி, குரால்நத்தம், தும்பல்பட்டி, கம்மாளப்பட்டி ஆகிய ஊராட்சிகளின் சேவை மையத்துக்கு செல்லும் கேபிள் ஒயர் துண்டிக்கப்பட்டு கிடக்கிறது. குறிப்பாக நல்லியாம்புதுார் செல்லும் வழி குறுக்கே கிடப்பதால், 3 மாதங்களாக மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.இதுகுறித்து மகளிர் குழுவினர் கூறுகையில், 'கேபிள் ஒயரை மட்டும் சேவை மையம் அருகே தொங்கவிட்டுள்ளனர். ஓராண்டாகியும் இன்டர்நெட் இணைப்பு கொடுக்கவில்லை. மொபைல் போன் டேட்டாவை பயன்படுத்தி சிறிது நேரம் பணிபுரிகிறோம். பல சேவை மையங்களை முறையாக ஒப்படைக்கவில்லை. கட்டியது முதல் பூட்டியே கிடக்கின்றன. இன்டர்நெட் இணைப்பு கொடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை