உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கல்யாணம், சேர்த்தி சேவை, பால் அபிேஷகம் ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் கோலாகலம்

கல்யாணம், சேர்த்தி சேவை, பால் அபிேஷகம் ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் கோலாகலம்

சேலம்,ஆண்டாள் அவதரித்த திருவாடிப்பூர திருவிழா, சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜர் கோவிலில் கடந்த, 3ல் தொடங்கியது. தினமும் மாலை, ஆண்டாள் நாச்சியாருக்கு விதவித அலங்காரங்கள் செய்யப்பட்டு, திருப்பாவை பாசுரங்கள் பாடி சிறப்பு பூஜை நடந்து வந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு ஆண்டாள், சவுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து மணக்கோலத்தில் அலங்கரித்திருந்தனர். சவுந்தரராஜரை, 'ரங்கமன்னாராக' பாவித்து ஆண்டாள் நாச்சியாருடன் பட்டாச்சாரியார்கள் மாலை மாற்றி திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வைத்தனர். அதேபோல் பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள் கோவிலில் 10 நாட்கள் நடக்கும் ஆடிப்பூர திருவிழா கடந்த ஜூலை, 28ல் தொடங்கியது. நேற்று வரதராஜருடன் ஆண்டாள் நாச்சியாருக்கு திருமஞ்சனம் செய்து சர்வ அலங்காரத்துடன், 'சேர்த்தி சேவை'யில் எழுந்தருள செய்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பெரியநாயகி அம்மன், கரபுரநாதர் மூலவருக்கு பால், தயிர், இளநீர் உள்பட, 16 வகை பொருட்களால் அபி ேஷகம் செய்யப்பட்டது. அம்மனுக்கு புதிதாக செய்யப்பட்ட, 'முத்தங்கி' அணிவித்து வளையல் மாலை, மலர் மாலை அணிவித்து பூஜை செய்யப்பட்டது. மூலவர் கரபுரநாதர், வெள்ளி 'நாகாபரணம்' அணிந்து அருள்பாலித்தார். வீரபாண்டி அங்காளம்மன் கோவிலில் மூலவர், மடியில் குழந்தை பாலமுருகனை அமர்த்திய கோலத்தில் வளையல் மாலை சார்த்தி அருள்பாலித்தார். ஆட்டையாம்பட்டி அருகே மருளையம்பாளையம் மாரியம்மன்; சேலம் அணைமேடு ரேணுகா அம்மன் கோவில் மூலவர், வளையல் காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.ஓமலுார் கடை வீதியில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில், 108 லிட்டர் பாலால் அபி ேஷகம் செய்யப்பட்டது. மதியம் உச்சிகால பூஜையை தொடர்ந்து மாலையில், 1,00,001 வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. இடைப்பாடி கவுண்டம்பட்டியில் உள்ள சின்னமாரியம்மன் சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ