தாரமங்கலம்,: தாரமங்கலம், கணக்குப்பட்டியில் ஒரு பிரிவினருக்கு சொந்தமான குல தெய்வ கோவில் உள்ளது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு பூசாரி கணேசன், 32, கோவிலுக்கு வந்தார். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த நகை, பணம் திருடுபோனது தெரியவந்தது. தாரமங்கலம் போலீசார் விசாரித்தனர். அப்போது, 'சிசிடிவி' கேமரா இல்லாததை பார்த்து, கேமரா பொருத்த அறிவுறுத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். கோவில் அருகே வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.விபத்தில் படுகாயம்அடைந்த முதியவர் பலிவாழப்பாடி, மே 6-பெத்தநாயக்கன்பாளையம், பனைமடலை சேர்ந்த, கார் டிரைவர் பழனிசாமி, 23. கடந்த, 2ல், 'அப்பாச்சி' பைக்கில் சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். வாழப்பாடி, சேசன்சாவடி அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது அதே பகுதியை சேர்ந்த முனுசாமி, 70, நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அவர் மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இருவரும் படுகாயம் அடைய, மக்கள் மீட்டு, மருத்துவமனைகளுக்கு அனுப்பினர். இதில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முனுசாமி, நேற்று காலை உயிரிழந்தார். சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பழனிசாமி, கவலைக்கிடமான நிலையில் உள்ளார். வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.கிணற்றில் விழுந்துகுழந்தை உயிரிழப்புஇடைப்பாடி, மே 6-சங்ககிரி, தேவூர் அருகே புள்ளாக்கவுண்டம்பட்டியை சேர்ந்த, விவசாயி கனகராஜ், 39. இவருக்கு இரு ஆண் குழந்தைகள். அதில், 3 வயது குழந்தை கார்முகிலனை, அவரது பெற்றோர், வீடு அருகே உள்ள கிணற்றில் அடிக்கடி குளிக்க வைத்தனர். நேற்று முன்தினம் மாலை குழந்தையின் பெற்றோர், அவரது தாத்தாவிடம் குழந்தையை விட்டு வெளியே சென்றனர். தாத்தா வீட்டுக்கு பின்புறம் சென்றபோது குழந்தை அருகிலுள்ள கிணற்றுக்கு வந்து இறங்கி மூழ்கிவிட்டது. பெற்றோர் வந்து, குழந்தையை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் காணவில்லை. கிணற்றில் விழுந்து இருக்குமோ என சந்தேகப்பட்டு, குமாரபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த வீரர்கள், அப்பகுதியில் உள்ள மீன்பிடி தொழிலாளர்கள் மூலம் தேடியபோது, கிணற்றில் இருந்து குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. தேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.