உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மோசடி புகாரில் சி.இ.ஓ., அலுவலக ஊழியர் மீது வழக்கு

மோசடி புகாரில் சி.இ.ஓ., அலுவலக ஊழியர் மீது வழக்கு

சேலம்:சேலம், அம்மாபேட்டை, காமராஜர் காலனியை சேர்ந்தவர் பூங்கொடி, 37; 'நர்சிங்' படித்துள்ள இவர், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், 'அரசு பள்ளியில் ஆய்வக டெக்னிக்கல் பிரிவில் வேலை உள்ளதாக, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளர் தமிழரசன், 59, கூறினார்.வேலை வாங்கி தருவதாக, 2022ல், 15 லட்சம் ரூபாய் வாங்கினார். வேலை வாங்கி தராத நிலையில் பணத்தை கேட்டதால், ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்' என கூறியிருந்தார்.போலீசார் நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன்படி அஸ்தம்பட்டி போலீசார், தமிழரசன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ