உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.25 லட்சம் மோசடி செய்து மிரட்டல் ரியல் எஸ்டேட் பிரமுகர் மீது வழக்கு

ரூ.25 லட்சம் மோசடி செய்து மிரட்டல் ரியல் எஸ்டேட் பிரமுகர் மீது வழக்கு

சேலம் : சேலம், சூரமங்கலத்தை சேர்ந்தவர் அந்தோணி மைக்கேல், 55. ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவருக்கு ஜங்ஷன் பிரதான சாலையில் ஒரு கட்டடம் உள்ளது. அதை சங்ககிரி, கோழிக்கால்நத்தத்தை சேர்ந்த செந்தில்முருகன், 57, என்பவர், 50,000 ரூபாய் வாடகை பேசி, முன்தொகையாக, 25 லட்சம் ரூபாயை, கடந்த மாதம் வழங்கினார். இதுதொடர்பாக ஒப்பந்தமும் போடப்பட்டது. ஆனால் அவருக்கு, அந்தோணி மைக்கேல், கட்டடத்தை வாடகைக்கு கொடுக்கவில்லை. இதனால் செந்தில்முருகன், சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதில், 'வாடகை பேசி பணத்தை பெற்றுக்கொண்டு, அந்தோணி மைக்கேல் வேறு ஒருவருக்கு கட்டடத்தை விற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் என் பணத்தை கொடுக்க மறுத்து கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார். இதனால் அந்தோணி மைக்கேல் மீது நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி