உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆங்கிலேயர் கொண்டு வந்த சட்டத்தை விட கொடூரமானது

ஆங்கிலேயர் கொண்டு வந்த சட்டத்தை விட கொடூரமானது

சேலம்: சேலம் ஸ்டேட் வங்கி அருகே, 9 தொழிற்சங்கங்கள் சார்பில் கண்-டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடந்தது. அதில், 3 சட்டங்க-ளுக்கு எதிராகவும், தொழிலாளர்களுக்கு, 44 சட்டங்களை, 4 தொகுப்பாக சுருக்கியதை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமை வகித்து பேசியதாவது:அமல்படுத்தப்பட்டுள்ள, 3 குற்றவியல் சட்டங்கள், சட்ட வல்லு-னர்களை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக நடைமுறைப்படுத்தப்-பட்ட கொடுமையான சட்டம். இதன்மூலம் மாஜிஸ்திரேட்டுக்கு பதில் இனி தாசில்தாரே, குற்றவாளிகளை, 'ரிமான்ட்' செய்-யலாம். 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை தடுக்க, ஆங்-கிலேயர் கொண்டு வந்த தேசவிரோத சட்டத்தை விட இது கொடூரமானது. இந்த மூன்று சட்டங்களையும் வாபஸ் பெற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இதில், தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., எல்.எல்.எப்., உள்பட, 9 தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ