உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெண்ணுக்கு வெட்டு: எலக்ட்ரீஷியன் கைது

பெண்ணுக்கு வெட்டு: எலக்ட்ரீஷியன் கைது

சேலம் : சேலம், பள்ளப்பட்டி பஸ் ஸ்டாப் எதிரே, தனியார் ஆயில் மில் பகுதியை சேர்ந்தவர் பிரியா, 29. இவரது கணவர் இறந்த நிலையில், 6 வயது மகள், 4 வயது மகனுடன் வசிக்கிறார். 4 ரோடு அருகே உள்ள ஓட்டலில் பணிபுரிகிறார். அங்கு வீராணம் அடுத்த பூச்சிவட்டத்தை சேர்ந்த, எலக்ட்ரீஷியன் கோகுல், 23, அடிக்கடி வர, பிரியாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.நேற்று இரவு, 7:15 மணிக்கு, 4 ரோடு பஸ் ஸ்டாப் அருகே இருந்த கோகுலுக்கும், பிரியாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த கோகுல், அரிவாளால் பிரியாவின் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டியுள்ளார். அலறி துடித்த பிரியாவை, மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அத்துடன் கோகுலை பிடித்து, பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'கோகுலும், பிரியாவும் நெருங்கி பழகி வந்தனர். இந்நிலையில் பிரியா, சில ஆண்களுடன் பழகியுள்ளார். இதுகுறித்து கோகுல் கேட்க, அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு, இச்சம்பவம் நடந்துள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ