சேலம்: சேலம் போஸ் மைதானத்தில், கட்டப்பட்டிருந்த தற்காலிக கடைகள், நேற்று இடித்து அகற்றப்பட்டன.சேலம் பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து, மாநகர பகுதி, வாழப்-பாடி, அயோத்தியாபட்டணம், ராசிபுரம், மல்லுார், வெண்-ணந்துார், மகுடஞ்சாவடி, ஓமலுார் உள்ளிட்ட பல்வேறு வழித்த-டங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.போக்குவரத்து நெரிசல் மற்றும் பயணிகளின் வசதிக்காக, சீர்மிகு நகர திட்டத்தின் கீழ், 92 கோடி ரூபாய் செலவில், இரண்டடுக்கு பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி, 2019ல், தொடங்கியது. அப்போது போஸ் மைதானத்தில், ரூ.3 கோடி செலவில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. இதில், 70 கடைகள் அமைக்கப்-பட்டு, இடிக்கப்பட்ட கடைகளில் வியாபாரம் நடத்தியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.கடந்த ஆண்டு, இரண்டடுக்கு பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், தற்காலிக கடைகளில் வியா-பாரம் செய்தவர்களும், இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது, ஐந்தாண்டுகளுக்கு பின், போஸ் மைதானத்தில் அரசு பொருட்-காட்சி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கு வசதி-யாக, இங்கு கட்டப்பட்டிருந்த தற்காலிக கடைகள், நேற்று பொக்லைன் உதவியுடன் இடித்து அகற்றப்பட்டன.