உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பதவி நீக்கம் குறித்த உத்தரவு தி.மு.க., ஊராட்சி தலைவியிடம் வழங்கல்

பதவி நீக்கம் குறித்த உத்தரவு தி.மு.க., ஊராட்சி தலைவியிடம் வழங்கல்

ஆத்துார்: தேசிய ஊரக வேலை திட்டத்தில் முறைகேடு புகாரில், பதவி நீக்கம் செய்யப்பட்ட தி.மு.க., ஊராட்சி தலைவியிடம், அதற்-கான உத்தரவை பி.டி.ஓ., வழங்கினார்.சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, பைத்துார் ஊராட்சி தலைவர் கலைச்செல்வி, 50. தி.மு.க.,வை சேர்ந்த இவர், தேசிய ஊரக வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடு செய்துள்ளதாக புகார் எழுந்தது. கடந்த, 2023 டிச., 20ல், அப்போதைய சேலம் கலெக்டர் கார்மேகம், ஊராட்சி தலைவி கலைச்செல்வியை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு தொடர்பாக, ஊராட்சி தலைவராக இருந்த கலைச்செல்வி, சென்னை உயர்நீதி-மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு பின், கலெக்டரின் உத்தரவை அமல்படுத்தும்படி, ஊரக வளர்ச்சித்து-றைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்-தரவுபடி கடந்த, 15ல், இதற்கான அரசாணை வெளியிட்ட நிலையில், பைத்துார் ஊராட்சி தலைவியை பதவி நீக்கம் செய்-யும்படி, ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப்சிங்பேடி, சேலம் கலெக்டர் பிருந்தாதேவிக்கு உத்தரவிட்டார்.அவரது உத்தரவுபடி சேலம் கலெக்டரும், பைத்துார் ஊராட்சி தலைவி கலைச்செல்வியை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை நேற்று, ஆத்துார் பி.டி.ஓ., (கி.ஊ.,) செந்தில், ஊராட்சி தலைவியாக இருந்த கலைச்செல்வியிடம் வழங்கினார். தொடர்ந்து, இதுதொடர்பான அறிக்கையும், கலெக்-டருக்கு அனுப்பி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி