உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நிதி நிறுவன மேலாளரை தாக்கிய ஊழியர் கைது

நிதி நிறுவன மேலாளரை தாக்கிய ஊழியர் கைது

சேலம்: சேலம், கருப்பூர் அருகே தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் அஜித்குமார், 28. சேலம், 5 ரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். அங்கு கலெக் ஷன் ஊழியராக, கருப்பூரை சேர்ந்த பாலமுருகன், 19, பணிபுரிகிறார். கடன் தொகை வசூலிப்பதில், அஜித்குமார், பாலமுருகன் இடையே முன்விரோதம் உள்ளது. கடந்த, 5ல் பாலமுருகன், அவரது நண்பர்கள், கருப்பூர் டீக்கடையில் இருந்த அஜித்குமாருடன் தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவரை, கட்டையால் தாக்கினர். படுகாயம் அடைந்த அஜித்குமார், ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி கருப்பூர் போலீசார் விசாரித்து, நேற்று முன்தினம் பாலமுருகனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை