சேலம்: சேலம், வைஸ்யா கல்லுாரி, வாசவி வித்யா டிரஸ்ட் மூலம், 1990ல் கிராமப்புற மக்களின் கல்வி மேம்பாட்டுக்கு, மாசிநாயக்கன்பட்டி, ராம கிருஷ்ணாபுரத்தில் அமைக்கப்பட்டது. மாணவர்களுக்கு பண்பாடு, ஒழுக்க நெறிமுறைகளுடன் கூடிய தரமான கல்வி, உயரிய சிந்தனையை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தேசிய தர நிர்ணய குழுவினரால், 4 முறை தர மதிப்பீடு செய்யப்பெற்றுள்ளது. போட்டி நிறைந்த இன்றைய உலகில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வகுப்பறைகளை கொண்டு கல்வியில் புதுமையான கற்றல் வழிமுறைகளை பயன்படுத்தி, மாணவர்களுக்கு கல்வியை வழங்கி வருகிறது. அனுபவமிக்க பேராசிரியர்களால் சாதாரண மாணவர்களையும், சாதனையாளர்களாக உருவாக்குவதே இந்நிறுவன நோக்கம்.வகுப்பு தொடங்கும் முதல் நாளில், அனைத்து பாடங்களுக்கும் தனித்தனியே பாடத்திட்டம் வழங்கப்பட்டு அதன்படி வகுப்புகள் நடத்தி, அதற்குரிய பாடக்குறிப்புகள், மாணவர்களுக்கு எளிமையாக புரியும்படி வழங்கப்படுகின்றன. மாணவர்கள், கல்லுாரிக்கு வர முடியாத நாட்களில், வகுப்புகளில் தினமும் நடத்தும் பாடங்களை, பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட, 'வைஸ்யா செயலி' மூலம் பார்த்து கேட்டு பயன்பெறும் வசதி உள்ளது. நுாலகத்தில், 21,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள், இதழ்கள், துறை, பாடவாரியாக இடம்பெற்றுள்ளன. லட்சக்கணக்கான புத்தகங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளன. ஆங்கிலத்திறன் பயிற்சி, அதற்கான பாடத்திட்டங்களோடு ஒவ்வொரு பருவத்திலும் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து தடங்களில் பஸ், பிராட்பேண்ட் இணைய வசதி, குளிரூட்டப்பட்ட கருத்தரங்கத்தில் ஹைடெக் ஸ்மார்ட் போர்டு உள்ளன. 2023 - 24ம் கல்வியாண்டில் நடந்த வளாகத்தேர்வில், 100 சதவீத வேலைவாய்ப்பு வசதியை பெற்றுள்ளனர். மாணவர்களின் பெற்றோர், வீட்டிலிருந்தே பார்க்க, அனைத்து வகுப்பறைகளில், 'சிசிடிவி' பொருத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் கலை ஆர்வத்தை அதிகரிக்க, கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.அரசு நெறிகாட்டுதல் அடிப்படையில் வழங்கும் கல்வி உதவித் தொகைகள், மாணவ, மாணவியருக்கு, உரிய துறைகள் மூலம் பெற்றுத்தரப்படுகின்றன. விடுதி, உணவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின் விளக்கு, மின்விசிறி ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் உள்ளன. கல்லுாரி குறித்த தகவல்களை, www.vysyainfo.in என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சிகளை, வைஸ்யா காலேஜ் எனும், யு டியூப் சேனல் வழியே பார்த்து தெரிந்துகொள்ளலாம்.