சேலம்: தலைவாசல் அருகே மணிவிழுந்தான் தெற்கில் உள்ள மாருதி பாலிடெக்னிக் கல்லுாரி நிர்வாகிகள் கூறியதாவது:ஆண்டுதோறும் மாருதி பாலிடெக்னிக் கல்லுாரியில் இருந்து நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவியர், சிறந்த கல்லுாரிகளான அண்ணா பல்கலை, பி.எஸ்.ஜி., சி.ஐ.டி., குமரகுரு, எஸ்.எஸ்.எம்., ஸ்ரீகிருஷ்ணா உள்ளிட்ட கல்லுாரிகளில் படித்து, பல முன்னணி நிறுவனங்களில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பணிபுரிந்து வருகின்றனர்.இந்த கல்லுாரியில் டிப்ளமோ படித்து சுலபமாக, 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்று மேற்கூறிய கல்லுாரிகளில் நேரடியாக, 2ம் ஆண்டில் சேர முடிகிறது. மேலும் மாணவர்கள், பிரேக்ஸ் இண்டியா, ஹூண்டாய், யமஹா, டர்போ எனர்ஜி ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் பணி நியமனம் பெற்று குறைந்தபட்சம் ஆண்டுக்கு, 2.20 லட்சம் முதல், 2.60 லட்சம் ரூபாய் ஊதியத்துடன் பணி அமர்த்தப்படுகின்றனர்.மாருதி பாலிடெக்னிக், வெள்ளி விழா கண்டு திகழ்வதால் மாணவ, மாணவியர், மாநில அளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். 2024 - 2025ம் கல்வியாண்டில் தகுதி உள்ள மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள், மாணவ, மாணவியருக்கு வழங்கும் சலுகைகளை பெற்றுத்தருகிறது. அதனால் மாணவ, மாணவியர், மாருதி பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்ந்து வெற்றி பாதையை தொடங்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.