உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஜாமினில் வந்த ரவுடிக்கு சிறை

ஜாமினில் வந்த ரவுடிக்கு சிறை

சேலம்: சேலம், வீராணம் அடுத்த சின்னவீராணம், குறிஞ்சி நகரை சேர்ந்த ரவுடி அய்யனார், 29. இவர், 2023 செப்., 15ல், சேலம் ஆர்.டி.ஓ., முன் ஆஜர்படுத்தப்பட்டு, எந்த குற்றங்களிலும் ஈடுபட கூடாது என அறிவுறுத்தி, அவருக்கு ஓராண்டுக்கு நன்னடத்தை பிணை பத்திரம், வீராணம் போலீசாரால் பெறப்பட்டது. இந்நிலையில் சின்ன வீராணம், நேரு நகரை சேர்ந்த கோபி என்பவரை தாக்கிய வழக்கில் கடந்த ஏப்., 13ல் கைது செய்யப்பட்டார். பின், 23ல் ஜாமினில் வெளியே வந்தார். நேற்று அவர், ஆர்.டி.ஓ., முன் ஆஜர்படுத்தப்பட்டு, அவருக்கு வழங்கப்பட்ட நன்னடத்தை பிணை பத்திரம் ரத்து செய்யப்பட்டது. மேலும் அவரை, செப்., 14 வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ