உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஜிவி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

ஜிவி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

மேட்டூர்: பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் மேட்டூர், மாசிலாபாளையம், 'ஜிவி' மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவியர் கனிஷா, ஜீவிதா முறையே, 588, 586 மதிப்பெண்களை பெற்று, முதல் இரு இடங்களை பெற்றனர். மாணவர் டைமண்ட் ரெனிஷ், 581 மதிப்பெண் பெற்று, பள்ளியில், 3ம் இடம் பெற்றார். பள்ளியில், 15 பேர், 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனர். 45 மாணவர்கள், 500க்கு மேல் மதிப்பெண் பெற்றனர். முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவியரை, தாளாளர் அன்பழகன், இயக்குனர்கள் பிச்சமுத்து, அமல்ராஜ், கருணாகரன், தலைமை ஆசிரியர் ராஜலிங்கம் பாராட்டினர்.

கேலோ இந்தியா திறனறி போட்டி தொடக்கம்

சேலம்: சேலம், காந்தி மைதானத்தில், 'சாய்' பயிற்சி மையம் சார்பில் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்க, 'கேலோ இந்தியா' திறனறி போட்டி நேற்று தொடங்கியது. பயிற்சி மைய உதவி இயக்குனர் மஞ்சுளா தலைமை வகித்தார். ஆசிய தடகள போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனை பவித்ரா தொடங்கி வைத்தார்.நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டம் உள்ளிட்ட தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. 50க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், திறமைகளை வெளிப்படுத்தினர். இன்று கபடி, நாளை கோ - -கோ, 9ல் கைப்பந்து, 10ல் கால்பந்து போட்டிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை