உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2ம் நாளாக வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

2ம் நாளாக வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

சேலம்: மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த, 3 குற்றவியல் சட்டங்கள், நேற்று முன்தினம் அமலுக்கு வந்தன. அதை திரும்பப்பெற வலியுறுத்தி, சேலம் வக்கீல்கள் சங்கத்தினர், நீதிமன்ற பணியை புறக்கணித்தனர். 2ம் நாளாக நேற்றும் பணியை புறக்கணித்தனர். மேலும் வரும், 6 வரை, நீதிமன்றத்துக்கு வரமாட்டோம் என தெரிவித்துள்ளனர். வக்கீல்களின் தொடர் புறக்கணிப்பால் நீதிமன்ற பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்கு வந்தவர்கள், ஏமாற்றத்துடன் திரும்பினர்.அதேபோல் ஆத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் நேற்று, ஆத்துார் வக்கீல்கள் சங்க தலைவர் சிவக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் ஓமலுாரில், வக்கீல் சங்க தலைவர் நடராஜன் தலைமையில் வக்கீல்கள், நீதிமன்ற பணியை புறக்கணித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை