உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போதை வாலிபர்கள் அலப்பறை: 4 பேர் கைது

போதை வாலிபர்கள் அலப்பறை: 4 பேர் கைது

சேலம்: சேலம் பொன்னம்மாபேட்டை, வாசக சாலையை சேர்ந்த சண்முகம் மகன் பிரகாஷ்,33. பைனான்ஸ் அதிபரான இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்கிறார்.அதே பகுதியை சேர்ந்த இவரது கூட்டாளிகள் அருண்குமார், 23, மணிகண்டன், 24, இலங்கேஸ்வரன்,28. இவர்கள் நால்வரும் அளவுக்கு அதிமாக மது அருந்திவிட்டு, நேற்று மாலை, 6:30 மணியளவில் சேலம் கன்னங்குறிச்சியில் இருந்து, பொலிரோ ஜீப்பில் புறப்பட்டுள்ளனர். ஜீப்பை பிரகாஷ் ஓட்டினார். சின்னதிருப்பதி பகுதியில் வந்த ஜீப், அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி, அதிலிருந்த இருவரை கீழே தள்ளிவிட்டதோடு, அவர்களை சரமாரியாக தாக்கிவிட்டு, அணைமேடு வழியாக தப்பினர். தொடர்ந்து அந்த ஜீப், அம்மாபேட்டை, டி.எம்.எஸ்., பஸ்ெஷட் அருகே வந்தபோது, அங்கு போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த ஏட்டு ரங்கநாதன், 39, தகவல் பேரில் அந்த ஜீப்பை, போராடி தடுத்து நிறுத்தினார். அதையடுத்து ஜீப்பில் இருந்த இறங்கிய நால்வரும், ஏட்டுவிடம் வாக்குவாதம் செய்தனர். அதை தட்டிகேட்ட பொதுமக்களை தாக்கியதோடு, மற்ற வாகனங்களுக்கு வழிவிடாமல் அலப்பறையில் ஈடுபட்டனர். அதனால், அப்பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.அங்கு வந்த போக்குவரத்து எஸ்.ஐ., ரங்கநாதன், ஏட்டு சுரேஷ் ஆகியோர் முயன்றும், போதை வாலிபர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அம்மாபேட்டை போலீசார், ரகளை செய்த நால்வரையும் கைது செய்தனர். பொலிரோ ஜீப் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி